
இஸ்லாம் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். அதோடு தனது 170வது படமாக உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார். இதை ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.சே.ஞானவேல் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதாவது படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளாராம். என்கவுன்டரை எதிர்த்து போராடும் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.