புதுடில்லி : நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், மார்ச் மாதத்தில், கடந்த 15 மாதங்களில் இல்லாத வகையில் 5.66 சதவீதமாக குறைந்துள்ளது.தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள்இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க இலக்கான 6 சதவீதத்துக்குள்ளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதுவே, கடந்த பிப்ரவரியில் 6.44 சதவீதமாக இருந்தது. மேலும் கடந்த ஆண்டு மார்ச்சில் சில்லரை விலை பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்ததற்கு, உணவுப் பொருட்கள் விலை குறைந்தது முக்கியமான காரணமாக அமைந்து உள்ளது.
‘ரெப்போ’ வட்டி
தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் 4.79 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, பிப்ரவரியில் 5.95 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு மார்ச்சில் 7.68 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement