Dhanush: சத்தமில்லாமல் தனுஷ் செய்த காரியம்: பெரிய சம்பவம் போலயே

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
Producer Dhanush: தயாரிப்பாளர் தனுஷ் செய்த காரியம் குறித்த தகவல் கசிந்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

​வுண்டர்பார்​தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சேர்ந்து வுண்டர்பார் ஃபிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்கள். ஐஸ்வர்யா இயக்குநர் அவதாரம் எடுத்த 3 படம் மூலம் தான் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் அடி எடுத்து வைத்தது. தனுஷின் மாரி 2 படத்திற்கு பிறகு வுண்டர்பார் நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டார் தனுஷ் என்று பேச்சு கிளம்பியது.
​மாரி செல்வராஜ்​நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார் தனுஷ். கர்ணனை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார். இது தான் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் 15வது படமாகும். மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு பெரும் தொகையை பட்ஜெட்டாக ஒதுக்கியிருக்கிறாராம் தனுஷ்.
​பட்ஜெட்​மாரி செல்வராஜ், தனுஷ் கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். அதனால் எவ்வளவு பெரிய தொகையை போட்டாலும் எடுத்துவிடலாம் என்கிறார்கள் ரசிகர்கள். தயாரிப்பாளர் தனுஷுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. படப்பிடப்பு அடுத்த ஆண்டு துவங்குமாம்.

​ஆபீஸ்​மாரி செல்வராஜுக்கு சத்தமில்லாமல் ஒரு அலுவலகத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறாராம் தனுஷ். நம் பட வேலையை பார்க்க இந்த அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறாராம். இந்த படம் சிறப்பாக வர வேண்டும் என்று விரும்புகிறாராம் தனுஷ். பிற மொழி திரையுலகில் இருந்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் தனுஷ் படத்தில் வேலை செய்யவிருக்கிறார்களாம்.
​கேப்டன் மில்லர்​Dhanush: மீண்டும் சேரும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?: சந்தோஷத்தில் ரசிகர்கள்தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தை மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். மேலும் தன்னுடைய 50வது படத்தை தனுஷே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

​ஐஸ்வர்யா ரஜினிகாந்த்​தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மீண்டும் சேர்ந்து வாழப் போகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஐஸ்வர்யா இரண்டு பேரை காதலித்தார். அதில் ஒருவர் சிம்பு மற்றொருவர் தொழில் அதிபரின் மகன். அந்த தொழில் அதிபரின் மகன் தற்கொலை செய்து கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரஜினி ரசிர்களோ, ஐஸ்வர்யாவை சும்மாவே விட மாட்டீர்களா என திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

​Aishwarya Rajinikanth:தனுஷுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு 2 காதலர்கள், அதில் ஒருவர் தற்கொலை: பயில்வானை விளாசும் ரஜினி ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.