ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகர் விஜய் மிகப்பெரிய ஸ்டார் என புகழ்ந்து பேசியுள்ளார் பிரபல பெங்காலி சூப்பர் ஸ்டார் நடிகர்.
விஜய்கோலிவுட் சினிமாவின் மாஸ் நடிகர் விஜய். கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார். தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி நடிகர் விஜய் அரசியலிலும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.திருமணத்தை தள்ளிப்போடும் த்ரிஷா… காரணம் இதுதான்!
பெங்காலி சூப்பர் ஸ்டார்நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் பிரபலங்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் பெங்காலி சூப்பர் ஸ்டார் நடிகரான தேவ், விஜய் குறித்து புகழ்ந்து பேசியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
Trisha: கல்யாணம் எப்போ? ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த ‘குந்தவை’ த்ரிஷா!
விஜய் பற்றி…அதாவது பெங்காலி நடிகரான தேவ் டிவிட்டரில் ask me anything செஷனில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் ஜாலி மோடில் பதில் கூறினார் நடிகர் தேவ். இதில் சென்னையை சேர்ந்த ரசிகர் ஒருவர், எங்கள் தளபதி விஜய்யை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? லவ் ஃபிரம் சென்னை என கேள்வி எழுப்பினார்.
Aishwarya Lekshmi: பச்சை நிற சுடிதாரில் பொன்னியின் செல்வன் ‘பூங்குழலி’… லேட்டஸ்ட் போட்டோஸ்!
பெரிய ஸ்டார்இதனை பார்த்த நடிகர் தேவ், அவர் ஒரு பெரிய ஸ்டார், அதே சமயம் நல்ல மனிதர் என்றும் பதில் அளித்தார். தேவ்வின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். தமிழ நடிகர்கள் குறித்து தேவ் இப்படி புகழ்ந்து பேசுவது இது முதல் முறையல்ல. ஒருமுறை அவரது இன்ஸ்பைரேஷன் யார் என கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த்தான் தன்னுடைய இன்ஸ்பைரேஷன் என கூறியிருந்தார் தேவ்.
Ponniyin Selvan 2: சோழர் குல வரலாற்றை பேசும் பொன்னியின் செல்வன்… தஞ்சாவூர் போகாதது ஏன்?
அக்டோபர் 19நடிகர் விஜய்யின் படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. அவரது மாஸ்டர் மற்றும் பீஸ்ட் படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளன. விஜய் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான வாரிசு படமும் வசூலை குவித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: ஜெயிலர் ஷூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த்… நெல்சன் சொன்ன சூப்பர் தகவல்!
Dev Vijay