ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் குறித்த தகவலை கூறியுள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
ஜெயிலர்நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயில் வார்டனாக நடிக்கிறார் ரஜினிகாந்த். மேலும் இப்படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
Samantha: அழகு பதுமையாக சமந்தா… சாகுந்தலம் படத்தின் க்ளிக்ஸ்!
தாடியுடன்ஜெயிலர் திரைப்படம் பக்கா பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முழுக்க தாடியுடன் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாடி இல்லாமல் கம்ப்ளீட் ஷேவில் காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்துவிட்டதா தலைவர் தாடியை எடுத்துவிட்டாரே என கேட்டு வந்தனர்.
Indian 2: 68 வயசுலேயும்… இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் கமல்ஹாசன்!
படப்பிடிப்பு நிறைவுஇந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்கமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இதனை தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை.
Trisha: என்னம்மா… இவ்ளோ அழகா இருக்கீங்க… த்ரிஷாவை பார்த்து கிறங்கும் ரசிகாஸ்!
விரைவில் அப்டேட்தமிழ் புத்தாண்டை முன்னிட்டாவது அப்டேட் ஏதாவது வெளியாகுமா என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனாலேயே ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் நெல்சன் உறுதி அளித்துள்ளார்.
Suriya: சினிமாவில் சூர்யாவுக்கு ஏத்த ஜோடி அவர்தான்… ஜோதிகாவே சொன்ன நடிகை… யார் தெரியுமா?
விரைவில் வீடியோஜெயிலர் திரைப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் சிங்கிள் டிராக் அல்லது மேக்கிங் வீடியோ விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Nayanthara: ‘ப்பா.. என்னைவிட டெரரா இருப்பா போலங… நயன்தாராவை பார்த்து மிரண்ட ராதிகா!
லால் சலாம்இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கான வேலையைத் தொடங்கத் தயாராகி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலை மைய்யப்படுத்தி உருவாக்கப்படும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக ரஜினிகாந்த் 7 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நினைச்சுக்கூட பார்க்கல… பயங்கர அப்செட்டில் சமந்தா!
jailer