சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் செம க்யூட்டான வில்லியாக நடித்து மிரட்டிய நடிகை ஷாமிலி சுகுமார் குழந்தை பேற்றுக்காக அந்த சீரியலில் இருந்து விலகினார்.
அதன் பின்னர், அவருக்கு பதில் இன்னொரு நடிகை நடித்தார். ஆனால், தொடர்ந்து யூடியூப் சேனலில் தனது வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கனெக்ட்டில் இருந்து வருகிறார் ஷாமிலி சுகுமார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள நகைகளை வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி எனும் பெண் திருடியதாக கைது செய்யப்பட்டது பரபரப்பை கிளப்பிய நிலையில், செம அசால்ட்டாக தனது வீட்டில் உள்ள நகைகளையே ஜுவல்லரி டூராக காட்டி உள்ளார் நடிகை ஷாமிலி சுகுமார்.. வாங்க அவரிடம் என்ன என்ன நகைகள் இருக்குன்னு பார்ப்போம்..
ரோஜா சீரியல் நடிகை: தென்றல் சீரியல் மூலம் 20 வயதில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ஷாமிலி சுகுமார். பைரவி, பாசமலர், ரோஜா, மாப்பிள்ளை, வள்ளி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி வந்த ஷாமிலி சுகுமார் கர்ப்பமான நிலையில், குழந்தைப் பெற்றுக் கொள்ள அந்த சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.
கணவரும் குழந்தையும்: சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டினாலும் குழந்தையை போல அன்புடன் பேசக் கூடியவர் ஷாமிலி சுகுமார். பேஸ்புக், யூடியூப் என சோஷியல் மீடியாவில் தனது வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை அப்படியே ஷேர் செய்து வருகிறார். ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷாமிலி சுகுமாருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதிகம் ஷேர் செய்து வருகிறார்.

நகை டூர்: சின்னத்திரை நடிகைகள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது ஹோம் டூர், பாத்ரூம் டூர் உள்ளிட்டவற்றை போட்டு வரும் நிலையில், ஷாமிலி சுகுமார் ரொம்ப வித்தியாசமாக தனது நகைகளின் கலெக்ஷனையே கடை விரித்துக் காட்டி உள்ள யூடியூப் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சந்திரமுகியாக மாறிய ஷாமிலி: நெத்திச்சூடி.. ஒட்டியாணம்.. என சந்திரமுகியின் நகைகளை ஜோதிகா எப்படி காட்டுவாரோ அதே போல ஷாமிலி சுகுமாரும் தனது நகை கலெக்ஷன்களை கேமராவுக்கு முன்பாக கொண்டு வந்து காட்டுவது ரசிகர்களை சற்றே கதி கலங்க விடுகிறது.

தங்க நகைகளின் அணிவகுப்பு: 10 ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கிய தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும் கவரிங் நகைகளையும் ஒவ்வொன்றாக காட்டியுள்ளார் நடிகை ஷாமிலி சுகுமார். மகாபாரதம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நிலையில், நகைகளை வாங்கி சேர்க்க ஆரம்பித்தேன் எனக் கூறியுள்ளார்.
கம்மல் முதல் கொண்டையில் சூடும் நகை வரை: காதில் அணியும் கம்மல் முதல் கழுத்தில் அணியும் ஆரம், மோதிரங்கள், நெக்லஸ், கொண்டையில் சூடும் நகைகள் வரை பல விதமான நகைகளை ஒவ்வொன்றாக பெட்டி பெட்டியாக திறந்து காட்டி பெண்களை பொறாமையில் ஆழ்த்துகிறார் ஷாமிலி சுகுமார். மேலும், நிறைய நகைகள் அம்மா வீட்டில் இருப்பதாகவும் அதனையும் விரைவில் காட்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகைகள் திருட்டு: சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஈஸ்வரியே நகைகளை திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வளவு நகைகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வைத்திருந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை என்கின்றனர். இந்நிலையில், ஷாமிலி சுகுமார் இப்படி வெளிப்படையாக தன்னிடம் இருக்கும் நகைகளை காட்டுகிறாரே என நெட்டிசன்கள் அவரது யூடியூப் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.