Rajini: சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு எழுந்த எதிர்ப்புகள்..ஓப்பனாக பேசிய கலைப்புலி தாணு..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

​சூப்பர்ஸ்டார்தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் சூப்பர்ஸ்டாராக நிலைத்து நிற்கின்றார் ரஜினி. இவர்தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்றும் தற்போது பலர் தெரிவித்து வருகின்றனர். என்னதான் சமீபகாலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை பெறவில்லை என்றாலும் ரஜினியின் மவுசு இன்றளவும் குறையவில்லை. 71 வயது ஆன பிறகும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தொடர்ந்து படங்களில் நடித்து உழைத்து வருகின்றார் ரஜினி. இப்படங்களின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பி தன் ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற போராடி வருகின்றார் சூப்பர்ஸ்டார்

​நம்பிக்கைரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக இபபடத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும் இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. எனவே ஜெயிலர் திரைப்படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் ரஜினி. இதையருது ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் , லோகேஷ் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக இருக்கின்றார் சூப்பர்ஸ்டார்

​சூப்பர்ஸ்டார் போட்டிகடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினி தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் சிலரோ தளபதி தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசி வருகின்றனர். இதன் காரணமாக இரு நடிகர்களின் ரசிகர்களுக்குள்ளும் மோதல்கள் வெடித்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் சரத்குமார் கூட அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என பலரும் விவாதிக்க துவங்கினர். அதில் சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். ஆனால் பொதுவாக ரஜினி தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது

​எதிர்ப்புசூப்பர்ஸ்டார் பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க அந்த சூப்பர்ஸ்டார் டைட்டிலை ரஜினிக்கு வைத்த தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் பேசியுள்ளார். பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தானி பைரவி படத்தில் ரஜினிக்கு முதல்முறையாக சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரும் நட்சத்திரங்கள் இருக்க வளர்ந்து வரும் நடிகரான ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்ததற்கு பல எதிர்ப்புகள் வந்ததாம். ரஜினியே சூப்பர்ஸ்டார் டைட்டில் வேண்டாம் என்றாராம். ஆனால் கலைப்புலி தாணு விடாபிடியாக இருந்து சூப்பர்ஸ்டார் என்கின்ற பட்டத்தை ரஜினிக்கு கொடுத்துள்ளார். ரசிகர்களுக்கும் அதற்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் ரஜினியை சூப்பர்ஸ்டாராக ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.