சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது.
இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ப்ரோமோஷன் டூர் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் ப்ரொமோஷனில் இளையராஜா குறித்து மணிரத்னம் பேசியது வைரலாகி வருகிறது.
இளையராஜாவை மிஸ் பண்ண இதுதான் காரணம்:மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் 600 கோடிக்கும் மேல் வசூலித்ததால், இரண்டாம் பாகம் மீதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர், பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா யுனிவர்ஸிட்டியில் PS Anthem என்ற ப்ரோமோஷன் பாடலும் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் பாடல்கள், பிஜிஎம் எல்லாமே ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு மியூசிக்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
1992ல் வெளியான ரோஜா படத்தில் இருந்து மணிரத்னம் – ஏஆர் ரஹ்மானின் மேஜிக் கூட்டணி, இசையில் மாஸ் காட்டி வருகிறது. முன்னதாக மணிரத்னம் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து வந்தார். நாயகன், மெளன ராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி போன்ற படங்கள் மணிரத்னம், இளையராஜா கூட்டணியின் லைஃப் டைம் மியூசிக்கல் ட்ரீட் எனலாம்.
கோலிவுட்டின் தரமான காம்போவாக வலம் வந்த இருவரும் தளபதி படத்திற்குப் பின்னர் இணையவில்லை. 1992ல் வெளியான ரோஜா படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, அதிலிருந்து கூட்டணியே மாறியது. இளையராஜாவும் மணிரத்னமும் பிரிய அவர்கள் இடையே இருந்த ஈகோதான் காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் மணிரத்னம் கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

அப்போது மேடையேறிய மணிரத்னத்தை “என்ன மணி வயசாகிட்டா” என கேட்டு இளையராஜா ஜாலியாக கலாய்த்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருந்தது. ஆனாலும், மீண்டும் இந்தக் கூட்டணி இணையவே இல்லை. இந்நிலையில், பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் பிஸியாக உள்ள மணிரத்னத்திடம் இளையராஜாவை மிஸ் செய்கிறீர்களா என அடிக்கடி கேட்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது அவரே பதிலளித்துள்ளார்.
அதாவது “எங்கு சென்றாலும் இளையராஜா இசையை மிஸ் செய்கிறீர்களா என பலரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக மிஸ் செய்கிறேன் தான், அவர் ஒரு ஜீனியஸ். இளையராஜா இசையைக் கேட்டுதான் வளர்ந்தேன். எத்தனை படம் எடுத்தாலும், அவரை மிஸ் பண்ணாமல் இருக்க முடியாது” என ஓப்பனாகவே கூறியுள்ளார். இதனால், இளையராஜா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இளையராஜா இசையை மிஸ் செய்கிறேன் என மணிரத்னம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.