கர்ப்பிணி என்றும் பாராமல் கணவர் இழுத்துச் சென்றாரா – சனாகான் விளக்கம்

சிம்பு நடித்த சிலம்பாட்டம் உள்பட சில படங்களில் நடித்தவர் சனாகான். கடந்த 2020ம் ஆண்டு முக்தி அனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார் சனாகான். இந்த நிலையில் சமீபத்தில் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனாகானை அவரது கணவர் கையைப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. இதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் கர்ப்பமாக இருக்கும் ஒருவரை இப்படியா இழுத்துச் செல்வது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்து ஒரு விளக்கம் அளித்து இருக்கிறார் சனாகான்.

அவர் கூறுகையில், இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அதிக நேரம் நின்று கொண்டிருந்ததால் எனக்கு வியர்த்து கொட்டியது. அங்கு நீண்ட நேரம் என்னால் நிற்க முடியவில்லை. அதன் காரணமாகவே எனது கணவர் என்னை அங்கிருந்து அழைத்து சென்றார். அதோடு என்னுடைய காருக்கு சென்றால்தான் தண்ணீர் மற்றும் ஏதாவது என்னால் சாப்பிட முடியும். அதோடு அந்த விருந்து நிகழ்ச்சியை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதன் காரணமாகவே விரைவாக அங்கிருந்து செல்லலாம் என்று என் கணவர் இடத்தில் நான் கூறியதால் அவர் என்னை வேகமாக அழைத்துச் சென்றார். இதுதான் அப்போது நடந்தது. இருப்பினும் என் மீது அக்கறை கொண்டு ஆதரவு தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார் சனாகான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.