பீஜிங்: சீனாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
நம் அண்டை நாடான சீனாவின் பிஜீங் அருகே உள்ள பெங்டாய் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்று 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் 26 நோயாளிகள் அடங்குவர். விபத்தில் காயம் அடைந்த நோயாளிகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் மருத்துவமனையின் தலைவர் உட்பட 12 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement