கொச்சி : ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் வரலாற்று கேரக்டர்களாகவே மாறி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனல் டூரில் படத்தின் நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர்.
சென்னை, கோவை, டெல்லியில் இவர்களது பிரமோஷனல் பணிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக தற்போது கேரளாவில் படக்குழுவினர் நிலை கொண்டுள்ளனர்.
ஜெயம் ரவியின் புதிய லுக் : நடிகர் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் குந்தவையாக த்ரிஷாவும் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியானது பொன்னியின் செல்வன். வரலாற்று பின்னணியுடன் வெளியான கல்கியின் இந்தப் படைப்பு தற்போது திரைவடிவம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில், வரலாற்று படங்களை பார்க்கும் ரசிகர்களின் அதிகமான ஆர்வம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் அடுத்த பாகம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படக்குழுவினருடன் தொடர்ந்து தங்களது பங்கிற்கு கடந்த இரு மாதங்களாக பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குந்தவை, வந்தியத்தேவன், அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் ஆகியோரின் கேரக்டர்கள் எப்படி உருவாக்கம் பெற்றது என்பதற்கான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முதல் பாகத்தில் படத்தின் நடிகர்களை அறிமுகம் செய்யவே போதுமான அவகாசம் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில்தான் படத்தின் அழுத்தமான காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. ஆதித்த கரிகாலன் மரணத்தை அவர் எப்படி கையாண்டுள்ளார் என்பது குறித்தும் கேட்கப்பட்ட நிலையில், படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திரையரங்குகளில் அந்த அனுபவத்தை பெறுமாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள நிலையில், அவர் இந்தக் கேரக்டருக்கு தன்னுடைய உடல்மொழி மற்றும் கட்டான உடல்கட்டால் நியாயம் செய்துள்ளார். அவருக்கு படத்தில் இரண்டு நாயகிகள் உள்ள நிலையில், இரண்டாவது பாகத்தில் அவருக்கு டூயட்டும் உள்ளது. தற்போது படக்குழுவினர் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, டெல்லியை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் கொச்சியில் முகாமிட்டுள்ளனர்.

இந்த டூரில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார் ஜெயம் ரவி. தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இந்த டூரில் கலந்துக் கொண்டுள்ள அவர், மிகவும் ஸ்மார்ட்டாக காணப்படுகிறார். தொடர்ந்து அவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிலையில், தற்போது கொச்சியிலும் அவரது ஸ்மார்ட் லுக்கில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஜெயம் ரவி காணப்படுகிறார்.

தன்னுடைய இயல்பான லுக்கில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தன்னை வெளிப்படுத்தியவர் நடிகர் அஜித். அந்த லுக்கில் கூட மாஸ் காட்ட முடியும் என்று நிரூபித்தவர். இந்நிலையில், அவரது இந்த நடைமுறையை மற்ற நடிகர்களும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் ஜெயம் ரவியும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஹாண்ட்சம்மாக காணப்படுகிறார். அவரது அதிகமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.