Vijay:இன்ஸ்டாவில் விஜய்க்கு இப்போ எவ்ளோ ஃபாலோயர்கள் இருக்காங்கனு தெரியுமா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Thalapathy Vijay: ஏப்ரல் 2ம் தேதி இன்ஸ்டாகிராமுக்கு வந்த தளபதி விஜய்க்கு தற்போது எவ்வளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என தெரியுமா?

​இன்ஸ்டாகிராம்​ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் விஜய் ஏப்ரல் 2ம் தேதி மாலை இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். அவர் இன்ஸ்டாகிராமுக்கு வந்ததை தமிழ் சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜய் கணக்கு துவங்கியதுமே அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்தது. அதை பார்க்கவே பலரும் விஜய்யின் இன்ஸ்டா பக்கமே கதி என்று இருந்தார்கள்.

​ஃபாலோயர்கள்​இன்ஸ்டாகிராமில் சேர்ந்த 24 மணிநேரத்திலேயே விஜய்யை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.6 மில்லியனை தாண்டியது. அடேங்கப்பா இதே வேகத்தில் சென்றால் விஜய்ணா பல புதிய சாதனைகள் படைத்துவிடுவார் என்றார்கள் ரசிகர்கள். இன்ஸ்டாகிராமுக்கு வந்த வேகத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் விஜய்.

​Vijay:இன்ஸ்டாவில் சேர்ந்த 24 மணிநேரத்தில் 4.6 மில்லியன் ஃபாலோயர்கள்: தளபதி எல்லா ஆப்லயும் கில்லிடா

​7 மில்லியன்​இன்ஸ்டாகிராமுக்கு வந்த 99வது நிமிடத்தில் விஜய்க்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டார்கள். இன்ஸ்டாவில் கணக்கு துவங்கி 18 நாட்கள் ஆன நிலையில் விஜய்க்கு 7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் இன்ஸ்டாவில் 7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பிரபலமான தனுஷுக்கு 5.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். தனுஷை முந்திவிட்டார் தளபதி.

​ரசிகர்கள்​இன்ஸ்டாகிராமில் சிம்புவுக்கு 11.9 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். விரைவில் சிம்புவையும் முந்திவிடுவார் தளபதி என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். விஜய்யை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை பார்க்கவே தினமும் அந்த பக்கம் வருகிறார்கள் தளபதியன்ஸ். எண்ணிக்கை கூட கூட அவர்களுக்கு ஒரே சந்தோஷம் தான்.
​போஸ்ட்​இன்ஸ்டாகிராமுக்கு வந்த நாளில் ஒரேயொரு போஸ்ட் போட்டார் விஜய். அதன் பிறகு எந்த போஸ்ட்டும் போடவில்லை. அடிக்கடி ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுங்கணா என தளபதியன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய்யின் அந்த ஒத்த போஸ்ட்டுக்கு மட்டும் 7.9 மில்லியன் லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

​Trisha: த்ரிஷாவின் திருமணம் நின்றது ஏன்?: அம்மா உமா சொன்ன உண்மை

​லியோ​கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வரும் லோகேஷ் அது குறித்து எந்த தகவலும் கசிந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
​தளபதி 68​Thalapathy 68: தளபதி 68 இயக்குநர் அட்லியே: விஜய் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்கலியோ பட ஷூட்டிங்கே முடியாத நிலையில் தளபதி 68 படம் பற்றி பேசப்படுகிறது. பிரபல தெலுங்கு இயக்குநரான கோபிசந்த் மலினேனி தான் தளபதி 68 படத்தை இயக்குவார் என்றும், இல்லை இல்லை அட்லி தான் என்றும் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எந்த தகவலையும் நம்ப முடியாது என்கிறார்கள் ரசிகர்கள். அதனால் தற்போது லியோவில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்கிறார்கள் தளபதியன்ஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.