சென்னை: கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வரும் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்த தர்ஷா குப்தா தனது எக்ஸ் காதலர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
குக் வித் கோமாளியில் கலக்கல்: முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு கலக்கினார்.
தர்ஷா குப்தாவின் அழகில் மயங்கியே பல ரசிகர்கள் அந்த சீசனை பார்க்க ஆரம்பித்தனர். உடனடியாக அவருக்கு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் தர்ஷா குப்தா.

யோகிபாபுவுக்கு ஜோடி: ருத்ரதாண்டவம் படத்தில் அறிமுகமான தர்ஷா குப்தா சதீஷுக்கு ஜோடியாக சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மெடிக்கல் மிராக்கிள் படத்தில் நடித்து வருகிறார்.
செம காமெடி படமாக மெடிக்கல் மிராக்கிள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு வரும் தர்ஷா குப்தா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதல் வாழ்க்கை குறித்தும் பிரேக்கப் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.

இப்பவும் எக்ஸ் லவ்வர் கெஞ்சுறாரு: காதலித்து வந்த இளைஞருடன் பிரேக்கப் ஆன நிலையில், சமீபத்தில் தர்ஷா குப்தா அளித்த பேட்டியில், இப்பவும் என் எக்ஸ் என் கூட சேர வேண்டும் என கெஞ்சுறாரு என பேசி உள்ளார். ஆனால், நான் இனிமேல் சேரப்போவதில்லை என்று சொன்ன தர்ஷா குப்தா அதற்கான காரணத்தையும் விளக்கி உள்ளார்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்: ஒரு முறை அந்த டிரஸ்ட் உடைந்து விட்டால் அதன் பிறகு சேருவது சரியில்லை. நம்மை நேசிக்கும் ஒருத்தர் குடிசையில் இருந்தால் கூட எனக்கு ஓகே தான். ஆனால், ஆடி கார் வைத்துக் கொண்டு கோடி ரூபாய் கொடுத்தாலும், நம்பிக்கை வராத இடத்தில் காதல் நீடிக்காது என பேசி உள்ளார் தர்ஷா குப்தா.

ஆடை சர்ச்சை: கவர்ச்சி உடையில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி வரும் தர்ஷா குப்தா சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு நிர்வாண போட்டோஷூட்டையும் நடத்தி இருந்தார். சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் பட விழாவில் சன்னி லியோன் சேலை கட்டி வந்திருக்காங்க, நம்ம கோவைப் பொண்ணு எப்படி கவர்ச்சியா வந்துருக்காங்க பாருங்க என காமெடி நடிகர் சதீஷ் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
சின்மயி, நவீன் உள்ளிட்ட பலரும் தர்ஷா குப்தாவுக்கு சப்போர்ட் செய்ய சதீஷை வெளிப்படையாகவே ட்விட்டரில் விளாசி இருந்தார் தர்ஷா குப்தா. அதன் பின்னர், இருவரும் அந்த விவகாரம் தொடர்பாக பேசி சரி செய்துக் கொண்டதாகவும் மீடியாக்கள் கேள்வி எழுப்ப பதில் அளித்திருந்தார் தர்ஷா குப்தா.