சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.
கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்துள்ளது. இதில் எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சுட்டெரித்த கோடை வெயில் சற்று தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.