Kamal Haasan: திருப்தியுடன் போயிருப்பார்.. உங்கள் வலியை காலம் ஆற்றும்.. மம்மூட்டி தாயார் மறைவுக்கு கமல் இரங்கல்!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி. நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வந்தே மாதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

தற்போது நடிகை ஜோதிகாவுடன் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்மூட்டி. இந்நிலையில் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் நேற்று காலமானார். 93 வயதான பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Ponniyin Selvan 2: வாவ்… கமலின் கம்பீர குரலில் பொன்னியின் செல்வன் 2 இன்ட்ரோ.. வேற லெவல்!

இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. மம்மூட்டி தாயாரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாத்திமா இஸ்மாயிலின் உடல் அவர்களின் சொந்த ஊரான செம்புவில் உள்ள மசூதியில் நேற்று நல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மம்மூட்டியின் தாயார் மறைவுக்கு நடிகர்
கமல்ஹாசன்
டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ” டியர் ஃபிரண்ட் மம்மூட்டி உங்களின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்களின் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் போயிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sanjeev: திடீர்னு அப்படி சொல்லிட்டாங்க… கிழக்கு வாசல் சீரியல் குறித்து பேசிய சஞ்சீவ்!

மறைந்த பாத்திமா இஸ்மாயிலுக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகன்தான் நடிகர் மம்மூட்டி. தனது 6 பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பாத்திமா இஸ்மாயில். நடிகர் மம்மூட்டியின் மகன்தான் நடிகர் துல்கர் சல்மான். துல்கர் சல்மான், மலையாள மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகராக உள்ளார்.

மலையாள சினிமாவில் ஆரம்பத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் மம்மூட்டி பின்னர் ஹீரோவாக சிகரம் தொட்டார். மலையாள படங்கள் மட்டுமின்றி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகர் மம்மூட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.