சென்னை: நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலரும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பிரியாணி மீம்ஸ்களும் வைரலாகின.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு அவரது நண்பர்களும் ரசிகர்களும் அனுப்பிய பிரியாணியை பார்த்து விக்கியே ஷாக்காகிவிட்டார்.
நயன்தாராவுக்கு வந்த ரம்ஜான் பிரியாணி:நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். திரை பிரபலங்களான சல்மான் கான், அமீர் கான், கமல்ஹாசன், சிம்பு, சிவகார்த்திகேயன், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட ஏராளமானோர் ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல், சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிரியாணி மீம்ஸ்களும் வைரலாகின. தங்களது இஸ்லாமிய நண்பர்களிடம் ரம்ஜானுக்கு பிரியாணி ட்ரீட் வைக்குமாறு பலரும் போஸ்ட் போட்டு வந்தனர். நிலைமை இப்படியிருக்க, நயன்தாரா வீட்டில் எல்லாமே தலைகீழாக உள்ளது. அது என்ன என்பதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் போட்டோவுடன் பதிவிட்டு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நயன் – விக்கி தம்பதியினருக்கு அவர்களது நண்பர்களும் ரசிகர்களும் பிரியாணி அனுப்பி வைத்துள்ளனர். அதுவும் பல ஹாட் பாக்ஸ்கள், பாத்திரங்கள் என வண்டி வண்டியாக பிரியாணி சென்றுள்ளது. அதிலிருக்கும் பிரியாணியை எல்லாம் ஒன்றாக சேர்த்தால், ஒரு பிரியாணி கடையே போட்டுவிடலாம் போல தெரிகிறது. விக்கி – நயன் இருவருக்கு மட்டும் இவ்வளவு பிரியாணியா என நெட்டிசன்களே ஷாக்காகியுள்ளனர்.

தங்களுக்கு வந்த மொத்த பிரியாணி பார்சலையும் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள விக்கி, ஈத் கொண்டாடும் என் அன்பான நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் பெரிய அரவணைப்பும் என குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நயன் – விக்கி தம்பதியினருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பிரியாணியில் கொஞ்சமாவது கண்ணுல காட்டுங்கய்யா என கிண்டலாகவும் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
ரம்ஜான் முடிந்துவிட்டாலும் நயன்தாராவுக்கு சென்ற பிரியாணியை பார்த்து மீண்டும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவுக்கு கீழே ரசிகர்கள் பலவிதமான ஜாலியான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.