Custody Timeless Love – கஸ்டடி டைம்லெஸ் லவ் லிரிக்கல் வீடியோ – ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: Custody Timeless Love Lyrical Video (டைம்லெஸ் லவ் லிரிக்கல்வ் ஈடியோ) வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகிவரும் கஸ்டடி படத்தின் டைம்லெஸ் லவ் பாடலின் லிரிக்கல் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம் ஜி, நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமானது கடந்த 2007ஆம் ஆண்டு வெளியானது. கிரிக்கெட்டையும், நட்பையும் மையமாக வைத்து உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது.

சரோஜா, கோவா: முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து சரோஜா படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. த்ரில்லர் ஜானரில் உருவான அந்தப் படமும் மெகா ஹிட்டாக கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் .

அதனையடுத்து அவர் இயக்கிய கோவா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வெங்கட் பிரபுவின் மேக்கிங்கிற்கு என ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி வெங்கட் பிரபுவின் படத்துக்கு சென்றால் எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சம் இல்லை என்ற மைண்ட் செட்டும் உருவானது.

மெகா ஹிட் மங்காத்தா: முதல் மூன்று படங்களில் இரண்டு படங்கள் மட்டுமே ஹிட்டாகியிருந்தாலும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது. அதுவும் அஜித்தின் 50ஆவது படமாக அமைந்தது அந்தப் படம். மங்காத்தா படம் 2011ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அஜித் என்ற மாஸ் ஹீரோவை வெங்கட் பிரபு ஹேண்டில் செய்துவிடுவாரா என்ற கேள்விக்கு தனது மேக்கிங்கின் மூலம் பதிலளித்திருந்தார் வெங்கட் பிரபு.

Custody Movies Timeless Love Lyrical Video Out Now

சறுக்கிய வெங்கட்: மங்காத்தா கொடுத்த வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 பார்ட் 2 உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமின்றி அவர் இயக்கிய பார்ட்டி படமும் வெளியாகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. அந்தப் படம் சிம்பு, வெங்கட் பிரபு என இரண்டு பேருக்கும் கம்பேக்காக அமைந்தது.

கஸ்டடி: இந்தச் சூழலில் மாநாடு படத்துக்கு அடுத்ததாக தமிழ், தெலுங்கு என பைலிங்குவலில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கிவருகிறார் வெங்கட் பிரபு. நாக சைதன்யாவுக்கு இது 22ஆவது படம் ஆகும். இப்படத்துக்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

Custody Movies Timeless Love Lyrical Video Out Now

லிரிக்கல் வீடியோ: இந்நிலையில் கஸ்டடி படத்தில் இடம்பெற்றிருக்கும் டைம்லெஸ் லவ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை மதன் கார்க்கி எழுத யுவன் ஷங்கர் ராஜாவும், கபில் கபிலனும் பாடியிருக்கின்றனர்.

இந்த லிரிக்கல் வீடியோவில் பாடல் எப்படி உருவானது என்பது தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த லிரிக்கல் வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் Head up High என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.