Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்… எவ்வளவு வசூல் தெரியுமா?

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 28ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாயை வசூலித்தது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
அந்த லிஸ்ட்டில் சேர்ந்த சமந்தா!

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருட் செலவில் பொன்னியின் செல்வன் படம் உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து படத்திற்கான புரமோஷன்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

மொத்த படக்குழுவினரும் நாடு முழுவதும் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கடைசியாக நேற்று திருச்சியில் படத்திற்கான புரமோஷன் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் அட்வான்ஸ் புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Aishwarya Rai: பிரமிக்க வைக்கும் பேரழகு… ஐஸ்வர்யா ராயின் அசத்தல் போட்டோஸ்!

அதன்படி, படத்தின் முதல் வாரத்திற்கான முன்பதிவு தமிழகத்தில் மட்டும் 6 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படத்தின் முதல் பாகம் போல் பரபரப்பாக பேசப்படவில்லை.

Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் திறந்த விக்னேஷ் சிவன்!

இதன் விளைவாக முன்பதிவு விற்பனை குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரடெக்ஷன்ஸ் இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு காட்சிகளிலும் அதிகாலை காட்சிகளிலும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரு காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் காட்சிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trisha: பிங்க் நிற பட்டு சேலையில் திருச்சியை திணறடித்த குந்தவை… த்ரிஷாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.