போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுக்கும் வகையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின் கீழ், TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்க இருக்கிறது. இது மே 1, 2023 முதல் போன்களில் வரும் போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிறுத்தும். இதற்குப் பிறகு, பயனர்கள் அறியப்படாத அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து விடுபடுவார்கள்.
மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்தி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஸ்பேம் பில்டர்ஸ்களை நிறுவ உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க இந்த பில்டர்கள் உதவும். இந்த புதிய விதியின்படி, ஃபோன் அழைப்புகள் மற்றும் செய்திகள் தொடர்பான அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மே 1, 2023-க்கு முன் பில்டர்களை நிறுவ வேண்டும்.
ஜியோவில் விரைவில் இந்த வசதி
ஏர்டெல் நிறுவனம் இதுபோன்ற AI ஃபில்டர்களின் வசதியை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின்படி ஜியோ தனது சேவைகளில் AI பில்டர்களை நிறுவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, எப்போது ஜியோ தொடங்கும் என்பதை பற்றி அதிக தகவல்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் AI பில்டர்களின் பயன்பாடு மே 1, 2023 முதல் தொடங்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
விளம்பர அழைப்புகள் தடை
போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுக்க TRAI விதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், 10 இலக்க மொபைல் எண்களுக்கு செய்யப்படும் விளம்பர அழைப்புகளை நிறுத்துமாறு டிராய் கோரியுள்ளது. இது தவிர, அழைப்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் காண்பிக்கும் அழைப்பாளர் ஐடி அம்சத்தையும் TRAI கொண்டு வந்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோவும் ட்ரூகாலர் செயலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் தனியுரிமை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அழைப்பாளர் ஐடி அம்சத்தை செயல்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன.