மும்பை: கடற்கரை அருகில் ரூ.13 கோடிக்கு பண்ணை வீடுகள்; விலைக்கு வாங்கிய ஷாருக் மகள் சுஹானா

மும்பையில் இருந்து சில மணி நேரத்தில் செல்லக்கூடிய கடற்கரை நகரமான அலிபாக்கில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

மும்பையில் அமையவிருக்கும் இரண்டாவது விமான நிலையத்தில் இருந்து அலிபாக்கிற்கு விரைவில் சென்றுவிட முடியும். நடிகர் ஷாருக்கானுக்கு அலிபாக்கில் அங்கு பண்ணை வீடு இருக்கிறது. ஷாருக்கான் வாங்கி இருக்கும் சொத்துக்கு அருகில் அவரது மகள் சுஹானா கான் 1.5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

மூன்று சகோதரிகளிடமிருந்து அந்த சொத்தை ரூ.12.90 கோடிக்கு சுஹானா வாங்கியிருக்கிறார். அதில் 3988 சதுர அடியில் மூன்று பண்ணை வீடுகள் இருக்கின்றன. இந்த சொத்தும் கடற்கரை அருகில் தான் இருக்கிறது. அலிபாக் மற்றும் கிஹிம் இடையில் இருக்கும் தால் என்ற கடற்கரை கிராமத்தில் இந்த சொத்து அமைந்திருக்கிறது.

சுஹானா

இந்த சொத்தை பதிவு செய்வதற்காக சுஹானா கான் தரப்பில் ரூ.77.46 லட்சம் முத்திரை தீர்வை செலுத்தப்பட்டுள்ளது. சுஹானா கான் பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார். முதல் கட்டமாக வெப்சீரியஸில் நடித்து வருகிறார். அதோடு விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.