Vijay: விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன் ? வெளிப்படையாக பேசிய வடிவேலு..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நகைச்சுவையில் தனி முத்திரையை பதித்து ரசிகர்களை தினம் தினம் ஈர்த்து வருபவர் தான் வடிவேலு. உடல் மொழிகளிலும், வசன உச்சரிப்பிலும் வித்யாசம் காட்டி ரசிகர்களை அசத்திய வடிவேலு தற்போது திரைத்துறையில் அடுத்த ரவுண்டை துவங்கியுள்ளார். ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை எனலாம்.

அந்த அளவிற்கு பிசியாக இருந்து வந்த வடிவேலு சில காரணங்களால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். பின்பு இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்து சில படங்களில் ஹீரோவாக நடித்தார் வடிவேலு. பின்னர் ரசிகர்களின் தேவையை உணர்ந்து நகைச்சுவை நடிகராகவும் பழைய மாதிரி நடிக்க முடிவெடுத்துள்ளார் வைகைப்புயல்.

Naa Ready: போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..ஒரே பாடலில் ஒட்டுமொத்த கதையையும் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!

அந்த வகையில் தற்போது சந்திரமுகி 2 உட்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வடிவேலு நடித்து வருகின்றார். இதையடுத்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் வடிவேலு. நகைச்சுவையாக இல்லாமல் முழு நேர சீரியஸான ரோலில் வடிவேலு நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

நடிக்க மறுத்த வடிவேலு

எனவே தான் மாமன்னன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வடிவேலு மாமன்னன் படத்தை பற்றியும்
உதயநிதி
பற்றியும் பல விஷயங்களை பேசியுள்ளார்.

அந்த வகையில் உதயநிதி கேட்டு தன்னால் ஒரு படத்தில் நடிக்கமுடியாமல் போனது என்பதை பற்றியும் பேசியுள்ளார் வடிவேலு. அதாவது உதயநிதி தயாரித்த முதல் படமான விஜய்யின் குருவி படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க தான் உதயநிதி முயற்சித்தார். எனவே குருவி படத்தின் கதையை கேட்ட வடிவேலு, இதில் என் கதாபாத்திரம் வலுவாக இல்லை என்றும், எனக்கு அந்தளவிற்கு படத்தில் வேலை இல்லை என்றும் கூறி படத்தில் நடிக்கமாட்டேன் என்றாராம்.

வித்யாசமான வடிவேலு

இதையடுத்து உதயநிதி மிகவும் கூலாக, நடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என சொல்லிவிட்டு அவர் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்குமாறு கேட்டாராம். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார் உதயநிதி. இதையடுத்து கே.எஸ் ரவிக்குமாரின் படம் என்பதால் கதையை கூட கேட்காமல் தான் நடிக்க ஒப்புக்கொண்டதாக வடிவேலு கூறியிருந்தார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் விஜய் மற்றும் வடிவேலு இதுவரை பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி இருக்கையில் விஜய்யின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வடிவேலு தவறவிட்டது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.