புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வன்முறைகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 822 கம்பெனி துணை ராணுவப் படைகளை, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் 337 கம்பெனி (33,700 வீரர்கள்) துணை ராணுவப் படைகளை அனுப்புவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம் இரவு தெரிவித்தது.