சென்னை: பிரபல நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மெட்டி ஒலி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெங்கட். அந்த சீரியலில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.
இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பால், பின் நாளில், போஸ் வெங்கட் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
நடிகர் போஸ் வெங்கட்: சின்னத்திரையில் வெற்றி பெற்ற போஸ் வெங்கட் பின்னர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். கார்த்தி, சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் போஸ். கவண் படத்தில் அரசியல்வாதி மிரட்டி இருப்பார். இந்த படத்திற்காக தலைமுடியை பாதியாக மொட்டை அடித்துக்கொண்டார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இயக்குநர் அவதாரம்: நடிகராக இருந்த போஸ் வெங்கட் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. நடிகராக வெற்றி பெற்ற போஸ் வெங்கட், இந்த படத்தை இயக்கி இயக்குநராகவும் வெற்றி பெற்றார். தற்போது திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஒரே நாளில் 2 மரணம்: இந்நிலையில், போஸ் வெங்கட் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு மரண சம்பவங்கள் நிகழ்த்து ஒட்டு மொத்த குடும்பத்தினரையே உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று காலை உயிரிழந்தார். இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போஸ் வெங்கட்டின் மூத்த சகோதரர் ரங்கநாதனும் உயிரிழந்தார்.
சோகத்தில் குடும்பம்: ஒரே நாளில் ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை பறிகொடுத்துவிட்டு, போஸ் வெங்கட்டின் ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீரில் மூழ்கி உள்ளனர். ரசிகர்களும், திரைப்பிரபலங்கள் பலரும் போஸ் வெங்கட்டின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவருவதோடு, இறந்தவர்களுக்கு ஆன்மா சாந்தி அடைய இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.