கோவை: கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்துகளில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால் இறக்கின்றனர். தலைக்கவசம் அணிபவர்களில் சிலர் ‘சின் ஸ்டிராப்’பை சரிவர அணிவதில்லை. குழந்தைகளை பள்ளிகளில் விடுகின்ற நேரமும் சந்தைக்கு செல்கின்ற நேரமும் தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டதாக இருசக்கர வாகன ஓட்டிகள் நினைத்துக் கொள் […]
