சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் சம்பதியாகப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போகிறதாம்.
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்து வரும் அர்ஜுன் மேலும், சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை ஹீரோயின் ஆக்க பெரிதும் முயற்சித்தார் அர்ஜுன். ஆனால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஐஸ்வர்யா அர்ஜுன்: 2013ம் ஆண்டு விஷாலின் பட்டத்து யானை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன் பின்னர், 2018ல் சொல்லிவிடவா படத்தில் நடித்தார்.
ஆனால், அந்த 2 படங்களும் பெரிதாக ஓடவில்லை. மேலும், கன்னடத்தில் நடித்த ஒரு படமும் காலை வாரி விட்டது. அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், கூடிய விரைவில் அவருக்கு திருமணம் என்றும் மாப்பிள்ளை குறித்த ஆச்சர்யமான தகவல்களும் வெளியாகி உள்ளன.
தம்பி ராமையா மகன்: நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா தான் ஐஸ்வர்யா அர்ஜுனை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அர்ஜுனுக்கு சம்பந்தி: காமெடி நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வரும் தம்பி ராமையா தனது மகன் உமாபதி ராமையாவுக்கு வெளிநாட்டில் பெண் பார்த்து வருவதாக கூறி வந்த நிலையில், தற்போது அர்ஜுனுக்கு சம்பந்தியாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகை யாஷிகா ஆனந்த் உடன் படு நெருக்கமாக உமாபதி பல இடங்களுக்கு சுற்றி வந்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக முன்னதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

சர்வைவர் ஷோவில் உமாபதி: அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஜீ5 தொலைக்காட்சியில் வெளியான சர்வைவர் தமிழ் ஷோவில் உமாபதி போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.
அப்படித்தான் அவருக்கும் நடிகர் அர்ஜுன் குடும்பத்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை உமாபதி காதலித்து வந்த நிலையில், பெரியவர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
கூடிய விரைவிலேயே இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.