பெங்களூரு:பள்ளி, கல்லுாரி மாணவியருக்கும் அரசு பஸ்களில் ‘ஜீரோ’ டிக்கெட் வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், ‘சக்தி’ என்ற திட்டம் வாயிலாக, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, ‘ஜீரோ’ டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால், அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு தற்போது அடையாள அட்டையை ஆய்வு செய்து, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதில், மாணவியர், தாங்கள் பஸ் ஏறும் இடத்தையும், இறங்கும் இடத்தையும் குறிப்பிட வேண்டும்.
தற்போது, நடப்பு கல்வியாண்டு, 2023 – 24ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் வாங்கியிருந்தால், அவர்களுக்கு ‘ஜீரோ டிக்கெட்’ வழங்க வேண்டாம் என்றும்; மாற்றுப்பாதை வழியாக சென்றால், அவர்களுக்கு ‘ஜீரோ டிக்கெட்’ வழங்குமாறும், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மாணவியருக்கும் ‘ஜீரோ’ டிக்கெட் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அதே வேளையில், ‘பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை இந்த பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம். ஜூலை 1 முதல் சேவா சிந்து இணையளத்தில் விண்ணப்பித்து புதிய பஸ் பாஸ் வாங்கிக் கொள்ளலாம் எனவும் அரசு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement