வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: போதிய அளவு மழை பெய்ய வேண்டி மாண்டியா மாவட்டத்தில் பாரம்பரிய முறைப்படி சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
![]() |
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமமம் கங்கேனஹள்ளி. இக்கிராமத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பெய்ய வேண்டிய மழை அளவு குறைந்து பெய்துள்ளது. இதனையடுத்து போதிய அளவு மழை பெய்ய வேண்டி மழை கடவுளை பிரார்த்தனை செய்தனர்.
மழை பெய்ய வேண்டி பாரம்பரியமாக செய்து வரும் சம்பிரதாயங்களை கடைபிடிக்க முடிவு செய்தனர்.அதன் ஒரு பகுதியாக சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் தொடர்ந்து இரு சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில்ஒருவர் மணமகளாகவும் மற்றொருவர் மணமகனாகவும் சித்தரிக்கப்பட்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். அது மட்டுமல்லாது கிராமத்தினர் அனைவருக்கும் திருமண விருந்து பரிமாறப்பட்டது.
![]() |
இது குறித்து கிராமத்தினர் கூறுகையில் மழை பெய்ய வேண்டி மக்கள் பழைய பாரம்பரியத்தை கொண்டாடி வருகின்றனர் என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement