வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:’அமெரிக்காவிடம் இருந்து ‘ட்ரோன்’கள் வாங்குவதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை’ என, ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
![]() |
நம் படைகளுக்கு, 31 ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாங்குவதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான, ராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துஉள்ளது.அமெரிக்காவிடமிருந்து அதிநவீன, ‘பிரடேட்டர்’ ரக ஆயுதம் தாங்கிய ட்ரோன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, கூறப்பட்டது. தற்போதைக்கு கொள்கை அளவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இதற்கிடையில், ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும், 25,000 கோடி ரூபாய்க்கு
விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
மிக அதிக விலைக்கு இந்த ட்ரோன்கள் வாங்கப்படுவதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.இதுகுறித்து ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு
உள்ளதாவது:அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்கள் வாங்குவதில் பல கட்ட நடவடிக்கைகள்
உள்ளன. தற்போதைக்கு கொள்கை அளவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
![]() |
ட்ரோன் விலை தொடர்பாக பல கட்ட பேச்சுகள் நடத்தப்பட்ட பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும். மற்ற நாடுகளுக்கு அளிக்கப்பட்ட விலை உள்ளிட்டவை ஆராயப்படும்.ஆனால், ட்ரோன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதாரமில்லாமல் பொய் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இது இந்த ஒப்பந்த நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். நாட்டின் நலன் மீது அக்கறையுள்ளவர்கள், இதுபோன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement