சென்னை: Leo (லியோ) நா ரெடிதான் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் லியோ படத்தின் இடைவேளை காட்சி குறித்து பேசியிருக்கிறார்.
பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸும் இருந்தது.
ஷூட்டிங்: லியோவின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலாக காஷ்மீரில் நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுங்குளிரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பையனூரில் ஷூட்டிங் முடிந்தது. இப்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. 2000 டான்ஸ்ர்கள் பங்கேற்ற பாடல் காட்சி சமீபத்தில்தான் முடிவடைந்தது.
காஷ்மீரில் லியோ: இதற்கிடையே காஷ்மீரில் ஷூட்டிங் நடந்தபோது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த மேக்கிங் வீடியோ வழக்கமாக இல்லாமல் பட்த்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை மையப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், லியோ படக்குழுவுக்கும் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய் கடந்த 22ஆம் தேதி தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி லியோ படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக்கும், நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் ரத்தம் தெறிக்க சுத்தியலுடன் ஹைனா விலங்குடன் விஜய் காட்சியளித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் முதல் சிங்கிளும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல்தான் 2000 டான்ஸர்களுடன் விஜய் ஆடிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் வரவேற்பைப் பெற்றாலும் அதில் இருக்கும் வரிகளை பலர் விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.
பாடலாசிரியர் யார்: இந்தப் பாடலை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருந்த பொளக்கட்டும் பற பற பாடல், விக்ரம் படத்தில் இடம்பெற்ற போர் கண்ட சிங்கம் ஆகிய பாடல்களையும் விஷ்ணுதான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. நா ரெடி பாடல் வெளியான பிறகு மேற்கொண்டு ஃபேமஸ் ஆகிவிட்டார் விஷ்ணு.
விஷ்ணு பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நா ரெடிதான் பாடலை கேட்டு விஜய் என்னை பாராட்டினார். விக்ரம் படத்தின் இன்டெர்வல் காட்சி எப்படி பேசப்பட்டதொ அதேபோல் லியோ படத்தின் இடைவேளை காட்சியும் பேசப்படும்” என்றார். இதற்கிடையே லியோ படத்தில் விஜய் பார்த்திபன், லியோ என்ற இரண்டு ரோல்களில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.அதேசமயம் இது டபுள் ரோலா இல்லை டபுள் ஆக்ஷனா என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.