வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஷில்லாங்: மேகலாயாவில் தோல் வியாதி காரணமாக 100 பசுக்கள் வரையில் பலியாகி உள்ளன.
![]() |
இது குறித்து மாநில கால்நடைத்துறை தெரிவித்து இருப்பதாவது: கால்நடைகளுக்கு வரக்கூடிய ஒரு வித தோல் வியாதி காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றி்ல் 5,884 பசுக்கள் நோயில் இருந்து மீண்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 28,500 பசுக்களுக்கு எல்.எஸ்.டி தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 2,100க்கும் மேற்பட்ட பசுக்கள் தோல் நோயின் பல்வேறு நிலைகளில் உள்ளன.
சில வகையான ஈக்கள், மற்றும் கொசுக்கள் உண்ணி போன்ற ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளால் பரவுகிறது. இது கால்நடைகளுக்கு காய்ச்சலை ஏற்படுத்துவதுடன் தோல்களி்ல் முடிச்சுகளை ஏற்படுத்துகிறது. அதோடு கால்நடைகளை மரணத்திற்கும் வழி வகுக்கிறது. ஆதே நேரத்தில் இந்த வகை வைரஸ் நோய் மனிதர்களுக்கு பரவாது என கூறினார்.
![]() |
கடந்த ஆண்டு இந்தியாவில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டி தோல் நோய் காரணமாக சுமார் 1.5 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement