ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விடாமுயற்சிஅஜித் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மே மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் படத்தைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர. .படப்பிடிப்பு எப்போதும் துவங்கும் என்றும் , படத்தை பற்றிய அறிவிப்பிற்காகவும் அஜித் ரசிகர்கள் தற்போது தவம் இருந்து வருகின்றனர்
தாமதம் ஏன் ?மே மாதம் இறுதியிலே விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது வரை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் தான் என ஒரு தகவல் வந்துள்ளது. விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் சமீபத்தில் ரெய்டில் சிக்கியதால் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருவதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மெல்ல மெல்ல தயாரிப்பு நிறுவனம் அந்த பிரச்சனையை சரிசெய்து வருவதாகவும் , விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
தீவிரம் காட்டும் அஜித்லைக்கா நிறுவனம் ரெய்டில் சிக்கியதால் விடாமுயற்சி திரைப்படம் நடக்குமா ? இல்லை கைவிடப்படுமா ? என்றெல்லாம் வதந்திகள் பரவின. இந்நிலையில் இந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அதாவது அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் லுக் டெஸ்ட்டிற்காக லண்டனுக்கு சென்றுள்ளனர். இந்த தகவல் படத்தை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதையடுத்து விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் பிறந்துள்ளது
லேட்டஸ்ட் அப்டேட்இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் கண்டிப்பாக துவங்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. படத்தின் ஒட்டுமொத்த கதையும் தயாரான நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேர்வும், லொகேஷன் தேர்வும் நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து புனேவில் மிகப்பெரிய செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் புனேவில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வந்துள்ளது. விரைவில் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இந்த தகவலை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது