வெல்காம் : தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியாகினர்.
தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாக்க சட்டவிரோதமாக செயல்படும் பல தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசு மூடி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மே 18ல் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டது. தற்போதுதான் இச்சம்பவத்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
ப்ரீஸ்டேட் மாகாணம் வெல்காம் நகரில் உள்ள தங்கச்சுரங்கத்தின் செயல்பாடு 1990களில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த கனிம வளங்கள் தீர்ந்துவிட்டதால் அது மூடப்பட்டது. இச்சுரங்கத்தில் அவ்வப்போது சட்டவிரோதமாக கனிம படிவங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
மேலும் சுரங்கப் பணியின் போது எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்தினால் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 16 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சுரங்கப்பகுதி அபாயகரமானது என்பதால் மீட்புப்பணிகள் தாமதமாக நடந்து வருகிறது என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement