ரூ. 7,000-க்கும் குறைவான விலையில் அட்டகாசமான Nokia C12: ரகசியமாய் அறிமுகம் செய்த நோக்கியா நிறுவனம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன் சந்தையில் நம்பர் ஒன் நிறுவனமாக கொடி கட்டி பறந்த நோக்கியா நிறுவனம் திடீரென நிகழ்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் நுழைவால் பின்னடைவை சந்தித்தது. எனினும், நோக்கியா மீண்டும் வருவதற்கான, அதாவது வலுவான ஒரு கம்பேக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நிறுவனம் அதன் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் நோக்கியா சி 12 ப்ரோ -வின் (Nokia C12 Pro) புதிய நிறம் பற்றிய விவரங்களை டீஸ் செய்தது. புதிய நிறம் ஊதா (பர்பிள்). 

இப்போது, நோக்கியா நிறுவனம், C12 Pro இன் இந்த புதிய வண்ண மாறுபாட்டை சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் விலை 7 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வலுவான பேட்டரி மற்றும் அட்டகாசமான கேமரா கிடைக்கின்றன. இது தவிர, இந்த போனின் வடிவமைப்பும் மிக சிறப்பாக உள்ளது.

நோக்கியா மொபைல் இந்தியா தனது ட்விட்டர் கணக்கு மூலம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிறுவனம் நோக்கியா சி12 ப்ரோவிற்கான புதிய வண்ண வகையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிரீமியம் பதிப்பு விரைவில் ரூ. 6,999 என்ற விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்று இந்த பதிவில் காணலாம். 

Nokia C12 Pro ஃபோனின் விவரக்குறிப்புகள்

நோக்கியா சி12 ப்ரோ (Nokia C12 Pro) 6.3-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில், ட்யூடிராப் நாட்ச் மற்றும் மற்றும் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட HD+ தெளிவுத்திறன் (ரெசல்யூஷன்) உள்ளது. இந்த சாதனத்தை இயக்குவதற்கு பழைய 28nm Unisoc SC9863A1 சிப்செட் உள்ளது. மேலும் இது Android 12 Go பதிப்பை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் நீக்கக்கூடிய பேட்டரி (ரிமோவபிள் பேடரி) உள்ளது. இது 4,000mAh திறன் கொண்டது. இது HMD குளோபல் மூலம் குறைந்தபட்சம் 2 வருட வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும் Android புதுப்பிப்புகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தவிர, நோக்கியா நிறுவனம் இந்த ஃபோனுக்கு 12 மாத மாற்று உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

நோக்கியா சி12 ப்ரோ -வில் உள்ள கேமரா திறன்களைப் பொறுத்தவரை, இது 8எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் சிங்கிள்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிஎன்எஸ்எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஒரு microUSB ஒரு போர்ட் உள்ளன.

கூடுதல் தகவல்:

சில நாட்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனம், நோக்கியா ஈவ் 5ஜி ( Nokia Eve 5G) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. முன்னதாக, ஃபின்னிஷ் பிராண்ட்  Nokia Maze 2023 மற்றும் Nokia Vision ஆகியவற்றை  சிறந்த கேமரா அமைப்பு மற்றும் நீண்ட கால பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது.  சமீபத்தில், புதிய Nokia Eve 2023 பற்றிய செய்திகள் பரவலாக பேச பட்டது.  இந்த Nokia சாதனம் ஒரு அழகான வடிவமைப்பு மற்றும் சிறந்த சேமிப்பகத்துடன் வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.