டைட்டானிக் கப்பல் உள்ள பகுதியில் உள்ள ஆபத்து என்ன? டைட்டன் கப்பலில் இருந்த பெரிய குறை!

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க போன டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்ததில் 5 கோடீஸ்வரர்கள் அகால மரணம் அடைந்தனர். உண்மையில் டைட்டானிக் கப்பல் உள்ள பகுதியில் என்ன ஆபத்து உள்ளது. டைட்டன் கப்பலில் இருந்து பெரிய குறை என்ன என்பதையும் இப்போது பார்ப்போம்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறைகள் அதிகம் இருக்கின்றன. அந்த பனிப்பாறைகளில் தவறுதலாக மோதிய காரணத்தால் தான். 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது..விபத்து நேர்ந்த நாள் கடும் குளிர் நாள் ஆகும்.அப்போது மோதிய பனிப்பாறையின் அளவு சுமார் 1600 அடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு பனிப்பாறையில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அடுத்த 3 மணி நேரத்தில் மூழ்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த டைட்டானிக் கப்பல் சுமார் 3800 மீட்டர் ஆழத்தில், அதாவது கிட்டத்தட்ட த 3.8 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடக்கிறது. இந்த இடம் எங்கு உள்ளது என்றால் கனடாவின் நியூஃபவுன்ட்லாண்ட் கடற்கரையிலிருந்து 640கிமீ தொலைவில் இருக்கிறது. இங்குள்ள பனிப்பாறைகள் மிதந்து வருவதே கப்பல் போக்குவரத்திற்கே பெரும் ஆபத்தாக உள்ளன. ஆயிரக்கணக்கான பனிப்பாறைகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

சரி மற்றொரு முக்கியமான விஷயத்திற்கு வரும்.. பெரும் கோடீஸ்வரர்கள் ஐந்து பேருடன் சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் எப்படி வெடித்தது? பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஓஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘டைட்டன் நீர்மூழ்கி’ கப்பல் எப்படி வெடித்து சிதறியது? கடலில் ஆழப்பகுதியில் உள்ள மிகை அழுத்ததின் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Titanic Submarine: What is the danger in the area where the Titanic is located?

இதனை ஆங்கிலத்தில் ‘catastrophic implosion’ என்று அழைப்பார்கள். அதாவது catastrophic என்பதற்கு பேரழிவு என்றும் implosion என்பதற்கு பெரு வெடிப்பு என்றும் பொருளாகும். கடலின் ஆழத்திற்கு நாம் செல்லச் செல்ல, அங்கே அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும். கடலுக்கு அடியில் 3800மீட்டர் ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதலங்கள் இருக்கும் பகுதியில், கடலின் மேற்பரப்பில் இருப்பதைவிட 390 மடங்கு அதிகளவு அழுத்தங்கள் இருக்கும்.

உதாரணமாக சொல்வது என்றால் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் மிக சூடான நீரை உள்ளே ஊற்றி அதனை உடனே மூடிவிடுங்கள். சில நொடிகளில் அந்த பாட்டில்கள் அழுத்தத்தினால் நசுங்கி.. நெளிந்து காணப்படும். இதன் உச்ச நிலைதான் நீர்மூழ்கிக் கப்பலில் நடத்திருக்கும். மிகஅழுத்தம் வெளியில் இருந்து வந்ததால் அதை தாங்காமல் வெடித்து சிதறிஇருக்கலாம் என்பதே அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

Titanic Submarine: What is the danger in the area where the Titanic is located?

சரி டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்து பெரிய குறை என்ன என்பதை பார்ப்போம். 22 அடி நீளமும் 9 அடி அகலமும் 8 அடி உயரமும் கொண்ட டைட்டன் கப்பலை மற்ற போர்க்கப்பல்களுடன் ஒப்பிட முடியாது. இதனை சுற்றுலாவிற்காக மட்டுமே வடிவமைத்துள்ளனராம். சர்வதேச வகைப்படுத்துதல் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு கடல்சார் அமைப்பிலும் இந்த டைட்டன் நீர்மூழ்கி வாகனத்துக்கு எந்த சான்றிதழும் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

96 மணி நேரம் பயணிக்க கூடிய வகையில் ஆக்சிஜன் சப்ளையையும் கொண்ட டைட்டன் கப்பல் மூழ்க முக்கியமான காரணம், அதன் வடிவமைப்பு தான் காரணம் என்று டைட்டானிக் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூட குற்றம்சாட்டி உள்ளார். ஆழ்கடலில் செல்லும் போது மிகப்பெரிய அழுத்தம் இருக்கும். அதை தாங்கும் வல்லமை டைட்டன் கப்பலுக்கு இல்லை என்பதே பெரிய குற்றச்சாட்டாகவும் உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.