Leo: லியோ குடும்ப கதையா ?லோகேஷ் வைத்த ட்விஸ்ட் இதுதானா ?இது என்ன புது கதையா இருக்கு..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-

​சாதனை படைத்த நா ரெடிவிஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து நா ரெடி என்ற பாடல் வெளியானது. விஜய்யே பாடியுள்ள இப்பாடலை லோகேஷின் உதவி இயக்குனரான விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார். தர லோக்கலான குத்து பாடலாக வெளியான நா ரெடி
பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. இப்பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்களை வைத்து இப்பாடலை மிகப்பிரமாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளதாம். மேலும் இப்பாடல் படத்தில் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருக்குமாம்

​சர்ச்சைஒருபக்கம் நா ரெடி பாடல் சாதனை படைத்து வரும் நிலையில் மறுபக்கம் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றது. அதாவது நா ரெடி பாடலில் விஜய் அதிகளவில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் அதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. விஜய்யை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அப்படி இருக்கையில் அவர் இதுபோல பொறுப்பில்லாமல் நடிக்கலாமா என பலர் கேள்விகேட்டு வருகின்றனர். சிலர் இப்பாடலை படத்திலிருந்து நீக்கவேண்டும் எனவும் புகார் அளித்து வருகின்றனர். இவ்வாறு இப்பாடல் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.

​கதாபாத்திரம்நா ரெடி பாடலால் விஜய்க்கு பல எதிர்ப்புகள் வரும் அதே சமயத்தில் சில ஆதரவு குரல்களும் வருகின்றது. லியோ படத்தில் வரும் கதாபாத்திர வடிவமைப்பின் காரணமாகத்தான் விஜய் அப்பாடலில் புகைபிடிப்பது போல நடிக்கின்றார். படத்திற்கு தேவைப்படுவதால் மட்டுமே தான் அதுபோல நடிக்கின்றார். மேலும் விஜய் பல பாடல்களில் ரசிகர்களுக்கான நல்ல கருத்துக்களை கூறியுள்ளார். எனவே நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு இதுபோல சில விஷயங்களை ரசிகர்கள் தவிர்த்து விடலாம் என சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இருந்தாலும் ரஜினி போன்ற நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில் விஜய்யும் அதுபோல செய்யவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கின்றது

​ட்விஸ்ட்இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது லியோ படத்தின் கதையை பற்றிய ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது லியோ திரைப்படம் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என ஒரு சிலர் பேசி வருகின்றனர். என்னவென்றால் சஞ்சய் தத்தின் மகனாக விஜய் நடிக்க , சஞ்சய் தத்தின் சகோதரராக அர்ஜுன் நடிக்கின்றார். மேலும் மடோனா செபாஸ்டியன் விஜய்யின் தங்கையாகவும் , மன்சூர் அலி காணும் விஜய்யின் உறவினராகவும் நடிக்கிறாராம். இந்நிலையில் இந்த குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சனை தான் லியோ படத்தின் கதைக்கரு என ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு கேங்ஸ்டர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை தான் லியோ படத்தின் கதை என சிலர் அடித்து கூறுகின்றனர். எனவே இது உண்மையா இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியவரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.