என்ன பெரிய செந்தில் பாலாஜி.. எடப்பாடி பழனிசாமி தெரியுமா? அமைச்சரின் வீட்டிலேயே ஆளை தூக்கிய சம்பவம்!

சேலத்தில் இருந்து கொண்டே அதிமுகவில் மாற்றுக் கட்சியினரை இணைத்து வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் திமுக அமைச்சரின் வீட்டிலிருந்தே அதிமுகவுக்கு ஆள் தூக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

செந்தில் பாலாஜி பாலிடிக்ஸ்மாற்றுக் கட்சியினரை வளைத்து வந்து திமுகவில் சேர்த்து தலைமையின் குட் புக்கில் விரைவாக இடம் பிடித்தவர் செந்தில் பாலாஜி. குறிப்பாக அதிமுகவில் முக்கிய விக்கெட்டுகளை கழற்றி திமுகக்கு கொண்டு வந்தவர் அவர். களப்பணியில் முன்னணியில் நிற்கும் செந்தில் பாலாஜியால் உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக நல்ல வெற்றியை ருசித்தது.
அமலாக்கத்துறை ஆட்டம்!அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. குணமடைந்த பின்னர் அமலாக்கத்துறை விசாரணை, வழக்கு என அடுத்தடுத்து அவருக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சி.வி.கணேசன்இந்த நேரத்தில், அதிமுகவிலிருந்து தான் திமுகவுக்கு ஆள் தூக்குவீர்களா, நாங்கள் சும்மா இருப்போமா என்று எடப்பாடி பழனிசாமி அண்ட் கோ திமுகவில் முக்கிய புள்ளியை தங்கள் பக்கம் நகர்த்தியுள்ளது. தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசனின் மாப்பிள்ளை பொன்னர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது இரு பக்கமும் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படுகிறது.
குடும்பத்துக்குள் ஈகோஎப்படி இது சாத்தியமானது, இதன் பின்னணி என விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. மாமனார் அமைச்சர் பதவியில் இருக்கும் போது நமக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார் பொன்னார். ஆனால் அமைச்சரின் மகன் வெங்கடேசனே அதிகமாக முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மாப்பிள்ளை முறுக்கோடு கட்சியிலிருந்தே வெளியேறியிருக்கிறார் பொன்னர் என்கிறார்கள்.
சேலம் சென்ற பொன்னர்எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் திருச்சி சீனிவாசன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தூது விட்டு சேலம் சென்று ரத்தத்தில் ரத்தமாய் ஐக்கியமாகியிருக்கிறார் பொன்னர். இதனால் விரைவில் திருச்சி சீனிவாசனுக்கும், பொன்னருக்கும் கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போஸ்டிங் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.
கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி​​
அண்மை காலமாக எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தனது வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். உடல்நிலை காரணமாக பிற நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். தற்போது தான் சேலத்தில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார். சேலத்தில் உட்கார்ந்த இடத்திலேயே திமுகவின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றிவிட்டாரே எடப்பாடியார் என்று புகழ்பாடுகின்றனர் அதிமுகவினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.