வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: கருங்கடல் பகுதியில் ரஷ்யா எல்லையில் இங்கிலாந்தின் 2 போர் விமானங்களை ரஷ்யா தடுத்து நிறுத்தியது. இதற்கு, சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என இங்கிலாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையே ஒராண்டு காலத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன.
இதற்கிடையே ரஷ்யாவில் உள்நாட்டு கலவரங்கள் நடக்கும் என வாக்னெர் என்னும் தனியார் படை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து வாக்னெர் படை தனது உத்தரவை திரும்ப பெற்றதால்,உள்நாட்டு கலவரத்தில் திருப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்ய எல்லைக்குள் இங்கிலாந்து விமானங்கள் வந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இங்கிலாந்து தரப்பில் கூறும் போது, இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement