வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் எங்களின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. பாதுகாப்பு பணியில் ராணுவம், துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் வன்முறையாளர்களை ராணுவத்தினர் பிடித்து சென்றனர். ஆனால், அவர்களை பெண்கள் வழிமறித்தனர். இதனையடுத்து அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வன்முறையாளர்களை ராணுவத்தினர் விடுவித்தனர்.

இந்நிலையில் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டும் என்றே வழிகளை மறித்து பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர். இத்தகைய தேவையற்ற குறுக்கீடுகள் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றும் முக்கியமான சூழ்நிலைகளின் போது பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான எங்களின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து தரப்பு மக்களிடமும் இந்திய ராணுவம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement