
ஷூட்டிங்ன்னு வந்துட்டா சம்யுக்தா இப்படித்தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் சம்யுக்தாவுக்கு ஜோடியாக மகேஷ் நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 'சம்யுக்தா இப்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில ரொம்ப அமைதியா இருக்காங்க. குடும்ப பிரச்னை அவரை ரொம்பவே பாதிச்சிருக்கு. ஆனாலும் நடிக்கும் போது அதை காமிச்சிக்குவே மாட்டாங்க. அவர் நடிக்கிற சீன் வந்துட்டா உடனே அதுக்கு தகுந்தமாதிரி அந்த கேரக்டரா மாறிடுவாங்க. இந்த மாதிரி நடிக்கிறதுக்கெல்லாம் தனி மன தைரியம் வேணும்' என்று சம்யுக்தாவின் நடிப்பு திறமையை பாராட்டி பேசியுள்ளார்.