பொருத்தமான ராமன் சீதா.. பொருந்தாத அனுமன் : விமர்சிக்கும் ஜெயப்பிரதா

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். சைப் அலிகான் ராவணனாகவும், சன்னி சிங் லட்சுமணன் ஆகவும், தேவதத்தா நாகே அனுமன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக மூன்று முறை சீதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்ற நடிகை ஜெயப்பிரதா ஆதிபுருஷ் படம் பார்த்துவிட்டு தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பிரபாஸ் மற்றும் கிர்த்தி சனோன் இருவரும் ராமர், சீதாவாக பொருத்தமான தேர்வாக இருக்கின்றனர். ஆனால் அனுமன் கதாபாத்திர தோற்றமும் அதில் நடித்தவரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கத் தவறிவிட்டார். பொதுவாக கடவுள் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பொதுவெளியிலும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு கிளீன் இமேஜ் இருக்க வேண்டும். பிரபாஸை ஆந்திராவில் ரசிகர்கள் கடவுளாகவே பார்க்கின்றனர் .

அதுமட்டுமல்ல எனக்கும் அது போன்று ஒரு பிம்பம் மக்களிடம் இருந்ததால்தான் நான் மூன்று முறை சீதா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது. மக்களும் ஒவ்வொரு முறையும் அதை உள்ளன்போடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய சூழலில் கிளீன் இமேஜ் என்பதற்கான வரைமுறையும் நடைமுறையும் ரொம்பவே மாறிப்போய்விட்டது” என்று கூறியுள்ளார் ஜெயப்பிரதா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.