மாட்ரிட்: நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்ல அனுமதி தந்துள்ளது, மிகப்பெரிய பரபரப்பையும், அதையொட்டிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் உள்ள பிரபலமான பகுதி கட்டலோனியா… தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியமும்கூட.. இதன் தலைநகரமான பார்சிலோனா, உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களிலேயே மிகவும் பிரபலமானது.
இந்த கட்டலோனியாவில், தற்போது, பொது நீச்சல் குளங்களில் பெண்களை மேலாடையின்றி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாம்.. கட்டலோனியா மக்கள் இதை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
புகார்கள்: பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு, கடந்த 2020-ம் ஆண்டே கட்டலோனியா அனுமதி தந்திருந்தது.. இதற்கான சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால், சில நகராட்சி நீச்சல் குளங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளன.. இந்த நடைமுறையை அவைகள் தடுத்து வைத்திருந்தன.. இதனால், இந்த நகராட்சிகள் மீது புகார்கள் வெடித்தன.. தற்போது, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, மேலாடையின்றி செல்ல அனுமதி தர சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது.
பறந்த கடிதம்: எந்த வகையான பாரபட்சத்தையும் காட்டக்கூடாது என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, கட்டலோனியா அரசாங்கத்தின் சமத்துவம் மற்றும் பெண்ணியம் துறை, அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.
அதில், “பெண்கள் மேலாடையின்றி செல்வதை தடுப்பது, அவரவர்களின் உடல் தொடர்பாக ஒவ்வொரு நபரின் தேர்வுக்கான சுதந்திரத்தையும் மீறுவதும், மக்கள் தொகையில் இருந்து விலக்கி வைப்பதுமாகும். பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க வேண்டும். தாய்ப்பாலூட்டுவதை அனுமதிக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடைகளை பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்: அதுமட்டுமல்ல, “டவுன் ஹால்” எனப்படும் மக்கள் கூடும் நகர மண்டபங்களில் உள்ள நீச்சல் குளங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், சுமார் ரூ. 4 கோடி வரை அபராதம் விதிக்கப்படுமாம்.
இந்த அறிவிப்புதான் ஸ்பெயினில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. பெரும்பாலானோர் இதை கொண்டாடி வருகிறார்கள்.. கட்டலோனியா பிராந்தியத்தின் சமத்துவத் துறையின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்த கடிதம் ஒரு நினைவூட்டல்தான்.. இருந்தாலும், இனிமேல் நகராட்சிகள் இதற்குக் கீழ்ப்படிவது கட்டாயமாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலாடை: அங்குள்ள பெண்ணிய குழுவை சேர்ந்தவர்கள் இதை பற்றி சொல்லும்போது, ‘இது ஒரு பாலின சமத்துவ பிரச்சினை. ஆண்கள் மேலாடையின்றி செல்லலாம், ஆனால் பெண்களால் முடியாது என்கிற நிலையிருக்கிறது.. இதனை சரி செய்ய அதிகாரிகள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை… ஆனால் இப்போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார்.

பொதுவாகவே ஸ்பெயினை பொறுத்தவரை, பாலின சமத்துவத்துவதை நோக்கிய நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.. நிறுவன வாரியங்களில் குறைந்தது 40 சதவீத பெண் பிரதிநிதித்துவம் தேவைப்படும் சட்டத்தை ஸ்பெயின் அரசாங்கம் நிறைவேற்றும் முயற்சியை அன்றே துவங்கியிருந்தது.. அதுமட்டுமல்ல, ஐரோப்பாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக்கான உரிமையை வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது..
விவாதங்கள்: பேசுபொருள்: இதைத்தவிர, கருக்கலைப்பு மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் உட்பட, பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான சட்டங்களை ஸ்பெயின் நிறைவேற்றியிருக்கிறது. இவைகள் எல்லாம் உலக அரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டவை.. எனினும், நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்வதற்கான அனுமதி குறித்த தற்போதைய விவாதங்கள், அந்த நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பேசுபொருளாகி கொண்டிருக்கிறது.