பாரீஸ் : பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல் 17, மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிறுவன் உயிரிழந்தான்.
கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும் தெரிவித்தனர். இதுபற்றி அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் போராட்டம் வன்முறையாக மாறியதில் பள்ளிகள், காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளன என கூறியுள்ளார்.
வன்முறை சம்பவத்தில் 24 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். 40 கார்கள் தீக்கிரையாகி உள்ளன. இதனால் வன்முறை தொடர்ந்து பரவி விடாமல் தடுப்பதற்காக 2 ஆயிரம் கூடுதல் காவல் அதிகாரிகள் நேற்று குவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி வழங்கும் உலக வங்கி இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அமைச்சர்கள் மட்டத்திலான நெருக்கடி பிரிவினர் கலந்து கொண்ட கூட்டத்தில் தலைமையேற்று நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதில் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement