2,200 earthquakes in Iceland in 24 hours | ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2200 முறை நிலநடுக்கம்!: அடுத்தடுத்து குலுங்கிய கட்டடங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அமைந்துள்ள எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

latest tamil news

வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்க்யவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் நான்கிற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4க்கு மேல் பதிவாகியுள்ளது. மேலும், எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

latest tamil news

ஐஸ்லாந்தில் கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டானது. எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறாக ஒடியது. அப்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஐஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.