Trisha: விஜய், அஜித்தை அடுத்து சூப்பர் ஹிட் பட ஹீரோவுக்கு ஜோடியான த்ரிஷா

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவின் கெரியர் மீண்டும் உச்சத்தை தொட்டுவிட்டது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்து தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் த்ரிஷா.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ரூ. 200 கோடி வசூல் செய்த 2018 படத்தில் நடித்த டொவினோ தாமஸின் புது மலையாள படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. அகில் பால், அனஸ் கான் சேர்ந்து இயக்கும் ஐடென்டிடி எனும் அந்த படத்தில் டொவினோ தாமஸுடன் சேர்ந்து நடிக்கிறார்.

ஐடென்டிடி படத்தில் நடிக்கும் த்ரிஷாவை வரவேற்று ட்வீட் போட்டார் டொவினோ தாமஸ். மேலும் ஐடென்டிடி படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்தா் த்ரிஷா.

கடந்த 2018ம் ஆண்டு நிவின் பாலியின் நடிப்பில் வெளியான ஹே ஜூட் படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார் த்ரிஷா. இதையடுத்து 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாள படத்தில் நடிக்கிறார்.

த்ரிஷாவின் கெரியர் தற்போது சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் படத்தில் நடித்திருக்கிறார்.

லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஹீரோயின் த்ரிஷா தான். தனக்கு பிடித்த ஹீரோவான அஜித் குமாருடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் த்ரிஷா.

இது தவிர்த்து கல்யாண் கிருஷ்ணா இயக்கும் தெலுங்கு படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெற்றி பெற்ற பிறகு தன் சம்பளத்தை ரூ. 10 கோடியாக உயர்த்திவிட்டாராம் த்ரிஷா.

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதுடன் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Trisha: விஜய்யை முந்திக் கொண்டு தனியா சம்பவம் செய்யும் த்ரிஷா: இதை சத்தியமா எதிர்பார்க்கல

அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. ஹீரோயினை மையமாக கொண்ட தி ரோட் படத்தில் டான்ஸிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், லட்சுமி ப்ரியா, விவேக் பிரசன்னா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

அந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தி ரோட் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்து த்ரிஷாவை லியோவில் தான் பெரிய திரையில் பார்ப்போம் என நினைத்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் லியோவுக்கு முன்பே த்ரிஷா நடிப்பில் தி ரோட் படம் வெளியாகவிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தி ரோட் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் த்ரிஷாவை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

Jailer: காவாலா பாடல் பற்றி அனிருத் சொன்னது நடந்துடுச்சு: அருண்ராஜா காமராஜ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.