காஜல் அகர்வால் மகனின் பெயர் சீக்ரெட் இதுதானா? அட இது தெரியாம போச்சே!

சென்னை: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தன்னுடைய மகனின் உண்மையான பெயரைக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபலமான நாயகியான காஜல் அகர்வால். கடந்த 2008ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

நடிகை காஜல் அகர்வால்: மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

அடுத்தடுத்த படங்களில்: படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவரின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

actress kajal aggarwal son full name is Neelakandan

வதந்திக்கு முற்றுப்புள்ளி: இதையடுத்து, கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். தனது மகனின் போட்டோவை அவ்வப்போது ஷேர் செய்து வரும் நடிகை காஜல் அகர்வால் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவை விட்டு விலகுவதாகவும் செய்திகள் பரவின. ஆனால்,அதை காஜல் திட்டவட்டமாக மறுத்தார். காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.

அட இது தெரியாபோச்சே: இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி காஜல் அகர்வால், தன்னுடைய மகனின் உண்மையான பெயர் நீலகண்டன் என்றும் சிவன் மீது இருந்த பக்தியால், மகனுக்கு அந்த பெயரை வைத்ததாகவும், முதல் இரண்டு எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நீல் என அழைத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் காஜலுக்கு சிவன் மீது இவ்ளோ பக்தியா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.