Farhana: தியேட்டரில் விட்டதை ஓடிடியில் பிடித்த ஃபர்ஹானா… ஐஸ்வர்யா ராஜேஷ் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்தது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா என்ற இஸ்லாமிய கேரக்டரில் நடித்ததால் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதனால், திரையரங்குகளில் அதிகம் ரீச் ஆகாத ஃபர்ஹானா, தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓடிடியில் கலக்கும் ஃபர்ஹானா: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இந்தப் படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் குறித்து சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஃபர்ஹானா திரையரங்குகளில் வெளியாவதில் பிரச்சினைகள் எழுந்தன.

இதனால், இஸ்லாமிய பிரபலங்கள், இஸ்லாமிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் தனியாக திரையிடப்பட்டது. அப்போது ஃபர்ஹானா படத்தில் எந்தவித சர்ச்சையான காட்சிகளும் இல்லையென அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் தொடர்ந்து இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஒருகட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிரட்டல்கள் வர, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதேபோல் திருவாரூரில் ஃபர்ஹானா படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இப்படி பலவிதமான சர்ச்சைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான ஃபர்ஹானா, எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து ஃபர்ஹானா திரைப்படம் ஓடிடியில் வெளியாவதிலும் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. ஃபர்ஹானா ஓடிடி ரைட்ஸை ஏற்கனவே சோனி லிவ் நிறுவனம் வாங்கியிருந்தாலும், ஸ்ட்ரீமிங் ஆகும் தேதியை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், இந்த வாரம் 7ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது ஃபர்ஹானா. திரையரங்குகளில் கவனம் ஈர்க்காத ஃபர்ஹானா, தற்போது ஓடிடியில் மாஸ் காட்டி வருகிறது.

ஃபர்ஹானா ஒட்டுமொத்தமாக சூப்பரான திரைப்படம் எனவும், ஓடிடி ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாது என்றும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியான படங்களில் ஃபர்ஹானாவுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்ட ஃபர்ஹானா படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல் திரைப்படம் வெளியாகி அதுவும் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.