சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அஜித்தின் 62வது படமாக உருவாகும் இதனை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
இந்நிலையில், திரைப்படங்களில் ஒரிஜினலாக பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் ஹீரோக்கள் குறித்து சினிமா பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ஹாலிவுட் ஹீரோ டாம் குரூஸ்க்கு இணையாக அஜித் மட்டுமே பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதாகக் கூறியுள்ளார்.
டாம் குரூஸ்க்கு சவால் விடும் அஜித்: கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித், பின்னர் ஆக்ஷனில் அதிரடி காட்டத் தொடங்கினார். அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஆக்ஷன் ஜானர் படங்களில் கலங்கடித்த அஜித்துக்கு மங்காத்தா திரைப்படம் மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தது. இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த அஜித், ஒரே பைக் ஸ்டண்ட் சீனில் ரசிகர்களை சிலிர்க்க வைத்திருந்தார். பணம் கொள்ளையடிக்கும் காட்சியில் ஹைவேஸில் வீலிங் செய்தபடியே அஜித் செய்த பைக் சாகசம், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதன்பின்னர் அஜித் நடித்த படங்களில் பெரும்பாலும் பைக் சேஸிங் சீன் அல்லது பைக் ஸ்டண்ட் கண்டிப்பாக இருக்கும்.
ஆரம்பம், வலிமை போன்ற படங்களில் இன்னும் மிரட்டலான பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருந்தார் அஜித். இதற்காகவே அஜித்தின் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ரியல் பைக் ரேஸரான அஜித்துக்கு பைக் சண்டைக் காட்சிகளில் நடிப்பது அல்வா சாப்பிடுவதை போல என ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இந்நிலையில், அடுத்து அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் பைக் ஸ்டண்ட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ரமேஷ் பாலா, அஜித்தின் ரிஸ்க்கியான சண்டைக் காட்சிகள் குறித்து ட்வீட் போட்டுள்ளார். அதில் ஹாலிவுட் ஹீரோ டாம் குரூஸ் உடன் அஜித்தை ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். அதாவது பைக் சண்டைக் காட்சிகள், ரிஸ்க்கான ஃபைட் சீன்ஸ் இரண்டிலும் டாம் குரூஸ், அஜித் இருவரும் தான் ஒரிஜினலாகவே நடிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக கலக்கி வரும் டாம் குரூஸ் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக மிக உயரமான மலை உச்சியில் இருந்து பைக்கில் பறக்கும் காட்சியில் நடித்திருந்தார். அந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் ஹீரோ டாம் குரூஸ் உடன் அஜித்தை கம்பேர் செய்து ரமேஷ் பாலா டிவீட் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.