கேரளாவில், மாநில சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.,) துறை கொண்டு வந்த ‘லக்கி பில் மொபைல் ஆப்’ மத்திய அரசும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில், பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் பில்களை, மொபைல்போன் வாயிலாக அனுப்பும் போது, வாடிக்கையாளர்களுக்கு பரிசு கிடைப்பதற்கும், வரி ஏய்ப்பை தடுக்கவும், ‘லக்கி பில் மொபைல் ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் வரி வசூல் செய்வதில் பொதுமக்களின் பங்களிப்புடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில அரசால் அமல்படுத்தப்பட்டது.
வணிகர்களிடையே பில்களை கண்காணிக்க, ‘ரிட்டேன், இ–இன்வாய்ஸ், இ–வே பில்கள் ஆகிய அமைப்புகள் உள்ளன. வத்தகர், -நுகர்வோர் பில்களில் ஏய்ப்பை கண்காணிப்பதற்காக, மக்கள் பங்களிப்புடன் ‘லக்கி ஆப்’ செயல்படுத்தப்பட்டது.
இந்த ‘மொபைல் ஆப்’ பயன்பாடு வெற்றியடைந்த நிலையில், மத்திய அரசும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்துள்ளது.’மேரா பில் மேரா அதிகார்’ என்பது மத்திய அரசின் ‘லக்கி பில் ஆப்பின்’ பெயர்.
முதல் கட்டத்தில், ஹரியானா, குஜராத், ஆந்திர, அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி, பத்ரநகர்ஹவேலி யூனியன் பிரதேசங்களிலும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த ‘ஆப்’ல் உள்ள தகவல்களை ஆராயும் போது, கிடைக்கும் அதிகபட்ச வரியில் பாதி, அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும். ஸ்மார்ட் போன் வாயிலாக பதிவேற்ற, வாடிக்கையாளர் பில் வாங்குவதுடன் வியாபாரிகளின் கணக்குகளில் இந்த விற்பனை தகவல்கள் சேர்க்க வேண்டி வரும். அதனால், இந்த திட்டத்திற்கு அதிக முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement