ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் ஜூலை 6ம் தேதி வெளியானது.
பான் இந்தியா படமான சலார் டீசர் இதுவரை 100 மில்லியன் வியூஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சலார் டீசருக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிரபாஸின் தரமான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
சலார் டீசருக்கு டஃப் கொடுக்கும் போஸ்டர்: பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படம் ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சலார், செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் டீசரை கடந்த 6ம் தேதி படக்குழு வெளியிட்டது.
முன்னதாக பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி தோல்வியைத் தழுவியது. 600 கோடி பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் நெகட்டிவான விமர்சனங்களால் 450 கோடி மட்டுமே வசூலித்தது. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என வரிசையாக தோல்வி படங்களால் நொந்துபோயுள்ள பிரபாஸ், சலார் படத்தின் வெற்றியை எதிர்பார்த்துள்ளார். இந்தப் படம் ஹிட்டானால் மட்டுமே ப்ராஜெக்ட் கே பிஸினஸ் சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சலார் படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரிதாக ரீச் ஆகவில்லை. பிரசாந்த் நீலின் முந்தைய படங்களான கேஜிஃஎப் சாயல் சலார் படத்தில் அப்படியே இருப்பதாக ட்ரோல்கள் பறந்தன. அதேபோல், பிரபாஸுக்கு அவ்வளவு மாஸ் இல்லையென்றும் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் சலார் டீசரை பார்க்கும் போது, இதுவும் கேஜிஃஎப் மோடில் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சலார் டீசருக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிரபாஸின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. காமிக்ஸ் சூப்பர் ஹீரோ போல பிரபாஸ் வெறித்தனமான லுக்கில் மாஸ் காட்டும் இந்தப் போஸ்டர், சலார் டீசரை விட தரமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது சலார் படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸின் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன்மேட் போஸ்டர் இது.
முன்னதாக ஜூலை 6ம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு சலார் டீசர் வெளியானது. அதிகாலை டீசரை விட்டதை கூட மன்னித்துவிடலாம், ஆனால், இந்த மொக்கை டீசருக்கு இதுவா நேரம் என ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். சலார் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் போன்றவை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.