கோலாலம்பூர்: 3 நாள் சுற்றுப்பயணமாக மலேசியா சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
மலேசியா நாட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா சென்றடைந்த உடன் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வருகையை முன்னிட்டு கோஷங்களை எழுப்பிய படியும் மற்றும் மூவர்ண கொடியை அசைத்த படியும் அவர்கள் இருந்தனர்.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தத்தோ செரி முகமது ஹசனை நேரில் சந்தித்தார். இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இது குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது: இந்தியா- மலேசியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பரஸ்பர நலன்கள் குறித்து அந்நாட்டு அமைச்சர்களுடன் ஆலோசினை மேற்கொண்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement